- Ebooks
- Livres Audio
- Liseuses
ரதன் சந்தாவத் ஸலூம்ப்ராவின் சிரிப்பு, அந்தக் கிருஷ்ணபக்ஷத்து இரவின் பயங்கரமான அமைதியைச் சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச் சென்று, உதயசாகரத்தின் அலைகளின் இரைச்சலோடு கலந்துகொண்டது. அந்த இரவில் அவன் அவ்வளவு பலமாகச் சிரித்திராவிட்டால் இந்தக் கதை நிகழ்ந்தே இராது.
அவன் சிரிப்பைக் கண்டு அவன் கூடாரத்திலிருந்த ராஜபுத்திரர்கள், மிதமிஞ்சிய அச்சத்தால் பிரமித்து அசைவற்று நின்றார்கள். டேராவின் மூலையில் மூன்று ஈட்டிகளுக்கிடையில் கட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்த தீப்பந்தங்கூட, சிறிது பயப்பட்டதுபோல் ஜ்வாலையின் சலனத்தை ஒரு விநாடி நிறுத்திச் செங்குத்தாக எரிந்தது. வெளியே கூப்பிடு தூரம் வரையில் திட்டுத்திட்டாக நெருப்பை மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்த மொகலாயச் சிப்பாய்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், ரதனுடைய பெயரை உச்சரிக்க மட்டும் ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. சிப்பாய்களில் சிலர் சற்றுத் தூரத்திலிருந்த இளவரசன் அக்பர் டேராவையும், சேனாதிபதி டைபர்கான் கூடாரத்தையும் தலைநிமிர்ந்து பார்த்தார்கள். அக்கம் பக்கத்தில் எரிந்து நின்ற பந்த ஜ்வாலைகளின் வெளிச்சத்தால், கூடாரத் துணிகளில் விழுந்திருந்த மரத்தின் இலைச் சித்திரங்கள் காற்றால் மெள்ள அசைந்துகொண்டிருந்தனவேயொழிய வேறெந்தச் சலனத்தையும் அந்த கூடாரங்களில் காணோம்.
எந்த இடத்திலும் எந்தவிதமான சத்தமும் கிடையாது. கிருஷ்ணபக்ஷத்து இருள் முற்ற முற்ற, மொகலாய சைன்னியத்தின் ஆபத்தும் முற்றுகிறதென்பதை அறிந்த சேனாதிபதி டைபர்கான், இரவில் எத்தகைய சப்தமும் கேட்கக்கூடாதெனக் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தான். உதயசாகரத்தின் அலைகள் நீங்கலாக, இயற்கையின் இதர அம்சங்களும் அவனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகத் தோன்றின. தூரத்தில் சரேலென்று உயரமாய், பயங்கரமாய் எழுந்த ஹாராவளி மலை உச்சிகள் கூட, மொகலாய சைன்னியத்தில் நடப்பதை அறிய ஆவலுள்ளவைபோல் நிசப்தமாக நின்று கொண்டிருந்தன.
இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் ரதன் சிரித்ததை யார்தான் ரஸிக்க முடியும்? குளிர்காய்ந்து கொண்டிருந்த சிப்பாய்களில் ஒருவன், "இவனை அடக்க நவாப்புக்குகூடத் தைரியம் வரவில்லையே" என்றான். மற்றொரு சிப்பாய் பதில் சொல்ல வாயெடுத்தான். ரதன் மீண்டும் சிரித்த பயங்கரச் சிரிப்பு சிப்பாயின் திறந்த வாயை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.
ரதனின் கூடாரத்திலிருந்தவர்கள் தங்கள் தைரியத்தை மெள்ள வரவழைத்துக்கொண்டு, தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். ரதன் தன்னுடைய காலில் இருந்த அராபியச் செருப்புக்களைக் கீழே ஊன்றி ஆசனத்தைக் கூடாரத்தின் நடுத்தூணில் சாய்த்துத் தானும் சாய்ந்துகொண்டான். ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த பந்தத்தின் ஜ்வாலையில் அவனுடைய இரண்டு கண்களும் இரண்டு ஈட்டிகளென ஜ்வலித்தன. தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தவர்களின் முகத்திலிருந்த பயச்சாயையைக் கண்டு, சற்று நேரத்துக்கு முன் சிரித்த அவன் உதடுகள் ஒன்று சேர்ந்து ஒரு வெறுப்பையும், உள்ளடங்கியிருந்த கோபத்தையும் காட்டின.
அந்தக் கூடாரத்தில் சுமார் இருபது ராஜபுத்திர வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் கூட, ரதன் சந்தாவத்தின் ஹாஸ்யத்தில் கலந்து கொள்ள இஷ்டப்படவில்லை. சிரிப்பதற்கும் சமய சந்தர்ப்பம் உண்டல்லவா? அபாயமான நிலையில் அசந்தர்ப்பமாகச் சிரித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி யோசிக்கவேண்டாமா? இந்த யோசனைதான் கூடாரத்திலிருந்த மற்ற வீரர்களுக்குப் பயத்தையும் சஞ்சலத்தையும் விளைவித்தன. சேனாதிபதி டைபர்கான் எவ்வளவு முரடன், அவன் கட்டளையை மீறினால் அவன் குரூரம் எந்த எல்லைக்குச் செல்லும் என்பதை அந்த வீரர்கள் அறிந்திருந்தார்கள். மொகலாயப் படையிலிருந்த சொற்ப ராஜபுத்திரர்களை ஒழிக்க டைபர்கான் ஏதாவது ஒரு காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்பதும் அந்த வீரர்களுக்குத் தெரிந்தே இருந்தது.
இந்த நிலையில் டைபர்கான் உத்தரவை மீறி ரதன் சிரித்ததே அபாயம். அதுவும் டைபர்கான் அடைந்த ஒரு தோல்வியைப் பற்றிச் சிரித்தது அபாயத்திலும் அபாயம்!
Titre : ஜீவபூமி
EAN : 9798230727439
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook ஜீவபூமி est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte