- Ebooks
- Livres Audio
- Liseuses
தேவகிரி யாதவகுல மன்னன் மகாதேவனின் மகா மந்திரியும் சிறந்த கவியுமான ஹேமாத்ரி நறுக்கு ஓலைகளில் தான் வடித்துக் கொண்டிருந்த கவிதைகளில் ஆழ்ந்து கிடந்ததால், தனது காலடியில் வணங்கி எழுந்து பயபக்தியுடன் நின்றிருந்த ராஜபுத்திரி குலவதியை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை. அவர் எழுத்தாணி ஓடிக்கொண்டிருந்த வேகத்தைக் கவனித்த குலவதியும் அவருடைய சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க இஷ்டப்படாமலும் உதடுகளைக்கூட அசைக்காமலும் பேசாமல் நின்றுகொண்டே இருந்தாள். ராஜகுமாரி வந்ததையோ வணங்கியதையோ சிறிதும் கவனிக்காமலிருந்த மகாமந்திரியை இந்த உலகுக்குக் கொண்டுவர அவருடைய சீடர்களில் ஒருவன் மெதுவாக "குருநாதரே" என்று ஒருமுறை அழைத்தான். அதற்கும் அவர் தலை நிமிராது போகவே "மகாமந்திரி?" என்று சிறிது உரக்கவே, அழைத்ததும் காவிய நிஷ்டை கலைந்த ஹேமாத்ரி தமது கண்களை உயர்த்தி, அரசகுமாரியைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டு, "குழந்தாய், நீ வந்து வெகு நேரமாகிவிட்டதா?" என்று விசாரித்தார்.
குலவதியும் சிறிது புன்முறுவல் செய்து "இல்லை! அதிக நேரமாகவில்லை" என்று மிக மிருதுவான குரலில் பதில் சொன்னாள்.
"பாதகமில்லை, படிக்க உட்கார். அடுத்த பாடம் சொல்கிறேன்" என்றார்.
குலவதி சிறிது முகம் சுருங்கி "குருநாதரே! இன்று நான் பாடம் சொல்லிக் கொள்ள வரவில்லை" என்று கூறினாள்.
ஹேமாத்ரி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் "ராமாயணத்தில் நேற்று ராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் பஞ்சவடி தீரத்தில் தங்கியதைச் சொன்னேன். அடுத்த கட்டம் இன்னும் சுவாரஸ்யம். அதை இன்று பூர்த்தி செய்துவிடலாமே! அதுவும் ராவணன் சீதையைக் கொண்டு போன பிறகு வால்மீகி - விப்ரலம்ப சிருங்காரத்தை அமுதமாகப் பொழிந்திருக்கிறார்" என்று சொல்லி அந்த மகாகாவியத்தின் அழகை நினைத்துக் கண்களை மூடினார்.
ஆசார்ய ஹேமாத்ரி வியப்பு நிரம்பிய கண்களை ராஜபுத்திரியின் மீது நிலைநாட்டினார். "குலவதி! நமது பார்வைக்கும் கவியின் பார்வைக்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது. கவிக்கண் கொண்டு அதைப் பார்க்க நம்மால் முடியாது" என்று கூறினார் திட்டமான குரலில்.
குலவதி அப்படியும் விடவில்லை. "ஆசார்யரே! தாங்களும் கவிதானே. தங்களிடம் நானும் காவிய பாடங்களைக் கேட்டிருக்கிறேனே. ஏன் நம்மால் கவிப்பார்வையுடன் பார்க்க முடியாது?" என்று வினவினாள்.
"அபச்சாரம், அபச்சாரம்!" என்ற ஹேமாத்ரி "வால்மீகிக்கு முன் நாம் கவிகளா! அவர் பார்வையுடன் நாம் பார்க்க முடியுமா?" என்று கேட்டார். ஏதோ சொல்லக்கூடாததை ராஜகுமாரி சொல்லிவிட்ட தோரணை அவர் குரலில் இருந்தது.
"ஆசார்யரே!" மெதுவாக அழைத்தாள் குலவதி.
"சொல் ராஜகுமாரி!"
"மகான்கள் இருந்த இடங்களுக்கு நாம் யாத்திரை போவதில்லையா?"
"உண்டு"
''அப்படியானால் ராமனும் சீதையும் தங்கிய இடத்துக்குப் போவது யாத்திரையாகாதா?"
ஆசார்ய ஹேமாத்ரி சிந்தனையில் ஆழ்ந்தார் நீண்ட நேரம். பிறகு சொன்னார். "நீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஆனால் குலவதி! இப்பொழுது அந்த இடத்தில் யார் யாரோ வசிக்கிறார்கள். அடுத்த ஸஹ்யாத்ரி மலையிலும் முனிவர்கள் கிடையாது. தவம் செய்யும் யாரையும் பார்க்க முடியாது" என்று.
குலவதி கைகுவித்துப் பேச முற்பட்டு "ஆசார்ய தேவா! பழைய சூழ்நிலை இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் கோயில்களுக்குப் போகிறோம். அவை பழைய சூழ்நிலையில் இல்லை. அதற்காகப் போகாமலிருந்து விடுகிறோமா? அந்தப் புனிதத் தலங்களுக்குப் போவதே நமது மனத்தைப் புனிதப்படுத்திக் கொள்வதற்குத்தானே" என்று பிடிவாதமாகத் தனது கருத்துக்களை எடுத்துச் சொன்னாள்.
அதற்குமேல் எதவும் சொல்ல முடியாததால் "சரி! உன் தந்தையைக் கேட்டுச் சொல்கிறேன்" என்று ஆசார்யர் கூறினார்.
அதற்கும் பதிலைச் சித்தமாக வைத்திருந்தாள் குலவதி. "தந்தையைக் கேட்டுவிட்டேன்" என்றாள்.
"தந்தை சம்மதம் கொடுத்துவிட்டாரா?" ஆசார்யர் கேள்வியில் சிறிது கசப்பு தெரிந்தது. தம்மைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்காத மகாதேவன், எப்படி தனது சீடப் பெண் விஷயத்தில் தானே முடிவெடுத்தான் என்று சிந்தித்தார்.
Titre : துறவி
EAN : 9798227229120
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook துறவி est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte