- Ebooks
- Livres Audio
- Liseuses
சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறை செய்து துன்புறுத்தப் படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பி யோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் அவன் மகள் காஞ்சனாதேவியையும் சந்தித்து, காஞ்சனா தேவியிடம் காதல் கொள்கிறான். சோழ இளவலின் நண்பனான அரபு நாட்டு அமீரின் முயற்சியாலும் சீனக் கொள்ளைக்காரனான அகூதாவின் உதவியாலும் பீமன் பிடியிலிருந்து தப்பிய காஞ்சனாதேவி, குணவர்மன், அநபாயன் முதலி யோர் ஒரு கப்பலில் பூம்புகார் சென்றுவிட, காயமுற்ற இளையபல்லவனைச் சுங்க அதிகாரி கண்டியத்தேவனும், அமீரும், கூலவாணிகனும் தூக்கிக் கொண்டு அகூதாவின் கப்பலில் தூரக் கிழக்குப் பகுதிக்குச் செல்கிறார்கள்.
பாலூர்க் கடற்கரையில் பீமன் வீரர்களிடம் பொருதி படுகாயமுற்று அகூதாவின் கப்பலில் தூரக்கிழக்கு சென்ற இளையபல்லவன் ஒரே வருடத்தில் கப்பல் போர் வல்லவனாக மாறி, கலிங்கத்தின் கடற்படை பலத்தைத் தூரக் கிழக்கில் உடைக்கத் தீர்மானித்து, அதற்குத் தளம் நாடி சொர்ணத் தீவின் அக்ஷய முனைக்கு வருகிறான். அங்கிருந்த தீயவனான பலவர்மனையும் பூர்வகுடிகளையும் தந்திரத்தாலும் தீரத்தாலும் வெற்றி கொண்ட இளையபல்லவன், அங்கிருந்த காலத்தில் பலவர்மன் வளர்ப்புப் பெண் மஞ்சளழகியிடம் மையல் கொள்கிறான். அவள் அகூதாவின் சகோதரி மகள் என்பதை அறிந்து அகூதாவை வரவழைத்து அக்ஷயமுனையை மஞ்சளழகியிடம் ஒப்படைத்துவிட்டு, பலவர்மனைச் சிறை செய்து கடல்புறாவெனும் தனது அபூர்வ மரக்கலத்தில் கடல் மோகினி என்ற நக்காவரம் தீவை நோக்கிச் செல்கிறான்.
இனி...
Titre : கடல் புறா - மூன்றாம் பாகம்
EAN : 9798230612407
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook கடல் புறா - மூன்றாம் பாகம் est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte