- Ebooks
- Livres Audio
- Liseuses
புரவியில் மிக அலட்சியமாகவும் கடிவாளக் கயிற்றைக் கூடச் சரியாகப் பிடிக்காமலும் உட்கார்ந்து சென்ற அந்த வாலிபனைக் கண்டு, நீராடிவிட்டுக் கரையோரமாகச் சென்ற மங்கையர் பலரும் தங்களுக்குள் பலப்பல விதமாகப் பேசிக் கொண்டனர். 'எத்தகைய இளைஞன்! என்ன அழகு இவனுக்கு' என்றாள் ஒருத்தி. 'ஊருக்குப் புதியவன் போலிருக்கிறது!' என்றாள் மற்றொருத்தி, 'ஊருக்கென்ன? பாண்டிய நாட்டுக்கே புதியவனாயிருக்க வேண்டும்' என்றாள் இன்னொருத்தி. 'இல்லாவிட்டால் மதுரையில் நுழைவது சுலபமென்று நினைத்து ஆணவத்துடன் புரவியில் அமர்ந்திருப்பானா இவன்?' என்று கேட்டாள் வேறொருத்தி. இப்படி கேள்விகள் பலபடி அவர்களிடமிருந்து வந்தாலும், அவர்கள் அனைவர் மனத்திலும் அந்த வாலிபனின் அழகும் கம்பீரமும் ஊடுருவி நின்றன.
சேர நாட்டவனான இளமாறனுக்கு வயது இருபது ஆகியிருந்தும் முகத்தில் அந்த வயதுக்குண்டான அத்தாட்சி இல்லாமல் குழந்தையின் பால் முகம்போல அவன் வதனம் காட்சி அளித்தது. அவனுடைய செவ்விய இதழ்கள் பெண்களின் இதழ்கள் போல மென்மையாகவே இருந்ததன்றி மேல் உதட்டின் மேல் உதயமாகிக் கொண்டிருந்த அரும்பு மீசையும் அதிக வீரத்தைக் காட்டவில்லை. இருப்பினும் இதழ்களின் கோடியில் சதா தவழ்ந்து கொண்டிருந்த ஏளன நகையும், கண்களில் விளையாடிக் கொண்டிருந்த விஷமச் சிரிப்பும் அவன் அப்படி ஒன்றும் சாதாரணமாக வசப்பட்டுவிடக் கூடியவனல்லன் என்பதை நிரூபித்தன. அவனது சிறிய இடையில் தொங்கிக் குதிரையின் இடப் பக்கத்தில் அடிக்கடி உராய்ந்த நீண்ட பெரும் வாளும் சற்று அச்சத்தையே தந்தது. குதிரையில் எந்தச் சமயத்திலும் வீழ்ந்துவிடக் கூடிய நிலையில் உட்கார்ந்திருப்பவன் போல் அந்த வாலிபன் தோன்றினாலும் அவன் கால்களிரண்டும் புரவியின் வயிற்றுப் புடைப்பில் அணைத்திருந்த விதத்தைப் பார்த்த வழிப்போக்கர்கள் அவன் புரவிச் சவாரிக்குப் புதியவனல்லன் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
இப்படியாகப் பலரிடை பல கருத்துக்களைக் கிளப்பிவிட்டுக் கொண்டும், நாற்புறமும் சுழன்ற தன் பார்வையால் மதுரை மாநகரின் அருள் பலத்தையும், பொருள் பலத்தையும், படை பலத்தையும் எடை போட்டுக் கொண்டும் புரவியில் சென்ற இளமாறன், மெள்ள மெள்ள வைகை ஆற்றின் மேற்பகுதியிலிருந்த மூங்கில் பாலத்தை நெருங்கியதும் காவல் வீரர்களால் நிறுத்தப்பட்டான். அங்கிருந்த காவலர் தலைவன் இளமாறன் ஊர், பெயர் முதலியவற்றை விசாரித்துக் கொண்டதும் மேலே செல்ல உத்தரவிட்டான். இளமாறனும் பொய்யேதும் சொல்லாமல் உண்மையே சொன்னான். 'நான் சேர நாட்டவன். என் பெயர் இளமாறன். அழைப்பின் மேல் வணிகர் வீதியில் உள்ள மகர மாளிகைக்குப் போகிறேன்' என்று காவலரிடம் கூறியதும் காவலர் அவனுக்கு மிகுந்த மரியாதையுடன் வழிவிட்டதைக் கண்ட இளமாறன், 'இத்தனை கெடுபிடியிலும் காவல் பலத்திலும் மதுரை வீரர்கள் மரியாதையை மட்டும் இழக்கவில்லை. காரணமில்லா மலா பண்டைத் தமிழ் மொழி இங்கு வளர்ந்தது?' என்று பாராட்டிக்கொண்டே தன்னை அழைத்தவர்கள் கூறிய மாளிகையைத் தேடிச் சென்றான்
Titre : மூங்கில் கோட்டை
EAN : 9798230585923
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook மூங்கில் கோட்டை est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte