- Ebooks
- Livres Audio
- Liseuses
அரசன் பெயர் ஜெயசிம்மன். சேனாதிபதியின் பெயர் ஜெயபாலன். இருவரும் ஆயுள் முழுவதும் தோல்வியைத் தவிர வேறெதையும் கண்டதில்லை. மொகலாயர்களின், கையாட்களாகவே காலங்கழித்து விட்டார்கள்.
இருவரும் பலமுறை போருக்குச் சென்றிருக்கிறார்கள். ராஜபுதனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றவோ, இருபத்தைந்து வருஷங்களுக்கு மேல் மொகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி அக்பரையே கலங்கச் செய்துவிட்ட பிரதாபசிம்மன் குலமானத்தைக் காக்கவோ இவர்கள் போருக்குச் செல்லவில்லை. யாரிடம் கைகட்டிச் சேவகம் செய்தார்களோ அந்த எஜமானர்களின் கட்டளைப்படி யுத்த பூமியில் இரத்தம் சிந்தினார்கள். ஆளும் சக்தி "கொண்டா ஆட்களை" என்றதும் சைன்னியங்களைத் திரட்டி அனுப்புவதும், அதற்காகச் சக்கரவர்த்தி முதுகில் தட்டிக் கொடுத்து, 'சபாஷ்' என்றால் சந்தோஷத்தால் நிலைகுலைந்து போவதும், டில்லியிலிருந்து வரும் கௌரவப் பட்டங்களைச் சூட்டிக் கொண்டு பவனி வருவதும், இந்திய மன்னர்களுக்கு அக்பர் காலம் முதலே ஏற்பட்டுவிட்ட குணாதிசயங்கள்!
இப்படி அடிமைத்தனத்திலேயே காலங்கழித்து விட்டவர்களுக்குத் தைரியம் உடம்பில் தங்கி இருப்பது துர்லபமல்லவா? எதிரிகளிடமிருந்து குடிகளின் சொத்தையும் பெண்டு பிள்ளைகளின் உயிரையும், அதையும் விட முக்கியமான மானத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கத்தியை உருவும் வீரன் உடலில் வீரம் பெருகுமா அல்லது இன்றைக்கு ஜெயத்துடன் திரும்பாவிடில் நாளைக்கு நவாப் தலையைச் சீவிவிடுவாரே என்ற பயத்தில், உயிர் எந்த இடத்தில் போனால் என்ன என்று காவு ஆடுபோல யுத்த பூமிக்குச் செல்லும் மனிதன் இரத்தத்தில் சூரத்தனம் சொட்டுமா? ஆகையால் பயமே நிரம்பியது ஜெயசிம்மன், ஜெயபாலன் இருவர் வாழ்க்கையிலும். ராஜசேவையில் மட்டுமின்றி ராஜகிருதத்திலும் இவர்கள் பயங்கொள்ளிகளாய் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். ஆகவே நமது கதை தொடங்கும் சமயத்தில் ராஜ துர்க்கத்தின் கதவுகள் சரேலெனத் திறந்து இளைய ராணி கமலாதேவி உள்ளே நுழைந்ததும், ஜெயபாலன் மிகுந்த பீதி அடைந்து ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்தான்.
ராணியின் கண்கள் ஒருமுறை அறை முழுவதும் சுற்றி வளைத்து விட்டுச் சேனாதிபதியின் முகத்தில் சிறிது நேரம் நிலைத்தன. கூரிய அந்தத் திருஷ்டியைப் பார்க்க முடியாமல் ஜெயபாலன் தலைகுனிந்து கொண்டான். சிறிது நேரத்தில் மெள்ளச் சமாளித்துக்கொண்டு பேச முயன்றான். ராணியிடமிருந்த் நடுக்கத்தில் நாக்கு சொற்களை உச்சரிக்க மறுக்கவே, சேனாதிபதி உடம்பை அப்புறமும் இப்புறமும் அசக்கித் தொண்டையிலிருந்து ஏதோ சப்தங்களைக் கிளப்பினான்.
"அரசர் யுத்தத்திலிருந்து எப்போது திரும்புவார்?" என்று ராணி கேட்டாள்.
சேனாதிபதி விழித்தான். தன்னைப் பற்றிய நிஜமான தகவல் ஏதும் ராணிக்குச் சொல்லவேண்டா மென்று அரசர் அனுப்பி இருந்த நிரூபத்தை அப்பொழுதுதான் படித்து முடித்திருந்தான். ராணி ஒரு நிமிஷம் தாமதித்து வந்திருந்தால் அந்தக் கடிதம் தீக்கு இரையாகியிருக்கும். அரசர் கடிதத்தை அவன் படித்து முடிப்பதற்கும் ராணி உள்ளே நுழைவதற்கும் சமயம் சரியாயிருந்தபடியால், கடிதத்தை அப்படியே சுருட்டிக் கையில் பிடித்துக்கொண்டு, சேனாதிபதி எழுந்துவிட்டான். ராணி அரசரைப் பற்றித் தகவலைக் கேட்கவும், கடிதம் பிடுத்திருந்த கை வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது.
"சேனாதிபதி! நான் சொல்கிறது காதில் விழுகிறதா இல்லையா?" என்று இரண்டாம் முறை ராணி கேட்டாள். இந்தத் தடவை ராணியின் சொற்கள் கொஞ்சம் அழுத்தந்திருத்தமாக வந்ததோடு, கபடமான அவள் கண்கள், கடிதம் பிடித்திருந்த கையையும் நோக்குவதைக் கண்ட சேனாதிபதி, நான் இனியும் பேசாதிருந்தால் அனர்த்தம் வந்துவிடுமென்று 'மகாராணி! இதைக் கேட்கத் தாங்கள் இங்கு வரவேண்டுமா? அரண்மனைக்கு வரச் சொல்லி ஆளனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்று தட்டுத் தடுமாறிப் பேசினான்.
Titre : இளைய ராணி
EAN : 9798224704071
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook இளைய ராணி est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte