- Ebooks
- Livres Audio
- Liseuses
சித்திரை மாதத்து கோடை வெயில். ஆனால் இன்று மதியம் நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது.
மழை நல்லா பெய்தும் ரோடெல்லாம் கழுவிவிட்டது போல் காய்ந்துவிட்டிருந்தது.
இரவு குளிர்ந்த காற்று சன்னல் வழியே... வந்து தாலாட்டியது நவ்யாவை.
நவ்யா எழுந்து சன்னலில் முகம் வைத்து வெளியே பார்த்தாள். இருளில் மரங்களின் நிழல், மேகமாக இருந்ததால் சந்திரன் பாதி முகத்தைக் காட்டி... காட்டி மறைத்து மேகங்களில் மறைந்து தன் ஒளி முகத்தைக் காட்டியது.
தென்னை மரம் காற்றில் சர...சரவென ஆடியது. அந்த இரவு நேரத்தில் அந்த சின்ன சத்தம் இவளுக்கு அதிகமாகக் கேட்டது.
இந்த சத்தத்தில் குழந்தைகள் விழித்து விடுமோ என்று திரும்பி குழந்தைகளை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.
அவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் தூங்கினர். மீண்டும் வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரம் ஒன்றுமில்லை. கறுப்பு பெயிண்ட் அடித்தது போல் கறுப்பாக இருந்தது.
இந்த கறுப்பு இன்னும் சில மணி நேரத்திலேயே விடியலின் வெளிச்சத்தில் அகன்றுவிடும். ஆனால் என் வாழ்வில். கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
என் வாழ்வில் இனி வெளிச்சம் வருமா. விடியல் எனக்கு உண்டா. இல்லவே இல்லை என்று அவள் உள் மனது கூறியது.
மீண்டும் கண்களை இறுக மூடிக்கொண்டாள். தன்னிடம் இருந்தே அவளைக் காப்பது போல.
நீருக்குள் மூழ்குவதுபோல் அவளின் நினைவுகள் இழுத்துச் சென்றன. மூச்சுத் திணறியது. மேலே வர முயன்றாள். முடியவில்லை. மீண்டும் மூழ்கினாள்.
முருகன் சன்னதியில் கண் மூடி நின்றாள். ஐயர் தீபாராதனை காட்டிவிட்டு கையில் இரண்டு மாலையோடு வந்தார்.
நவ்யா கண் திறந்தாள்.
பக்கத்தில் ஒருவன் கண் மூடி நின்றிருந்தான். அவன் கண் திறந்து தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ளவும் அவனிடம் ஒரு மாலையைக் கொடுத்து "அந்தப் பெண்ணின் கழுத்தில் போடுங்கள்" என்று சொன்னார்.
மாலையை கையில் வாங்கிய அசோக் விழித்தான்.
"போடுங்கள்" என்றார் மீண்டும்.
அசோக்கும் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அவள் கழுத்தில் போட்டான்.
ஐயர் என்ன சொல்கிறார், அசோக் என்ன செய்கிறான் என்று யோசிக்கு முன் அவள் கழுத்தில் மாலையை போட்டுவிட்டான்.
மறுமாலையை அவள் கையில் கொடுத்து அவன் கழுத்தில் போடச் சொன்னார்.
அவள் வாங்காமல் இரண்டெட்டு பின்னால் நகர்ந்தாள்.
ஐயர் "எனனம்மா இது. நீங்கதானே இன்று கல்யாண நாள். அர்ச்சனை பண்ணனும் என்று சொன்னீங்க" என்றார்.
இருவரும் விழித்தனர்.
"யா... யா... ருக்கு கல்யாண நாள்."
இருவரும் திகைத்தனர்.
நவ்யா அவனை முறைத்தாள்.
"அம்மா தாயே... எனக்கே ஒன்றும் புரியவில்லை. நீ என்னைக் கண்ணாலேயே எரித்துவிடாதே..." என்று நடுங்குவதுபோல் சிரித்தான்.
பின் ஐயரிடம் திரும்பி "நாங்கள் சொல்லவில்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. உங்களுக்கு மிஸ்..." என்றான்.
"இன்னும் இல்லை" என்று மீண்டும் முறைத்தாள்.
"பாருங்க ஐயரே... நான் கேட்டதுக்கே என்னை இப்படி கண்ணாலேயே கபளீகரம் பண்ணிவிடுவாள் போல இருக்கே... இவளைப்போய் கல்யாணம் பண்ணிக்க முடியுமா...? இரவில் இவகூட நிம்மதியாகத் தூங்க முடியுமா...?"
அவள் இரண்டெட்டு அவன் முன்னே எடுத்து வைத்தாள்.
அவன் பின் நகர்ந்து ஐயர் கையைப் பிடித்துக் கொண்டான்.
"என்னைக் காப்பாத்துங்க ஐயரே... இவள் என்னை எரித்து பஸ்பமாக்கி விடுவாள் போல இருக்கே..." என்று அவர் பின்னாடி மறைந்தான்.
அவன் செய்கையும், பேச்சும் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அன்று சிரிக்காமல் கன்னத்தில் அறைந்திருந்தால் இன்று இந்த நிலமை இவளுக்கு வந்திருக்காது
Titre : என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?
EAN : 9798227053237
Éditeur : S.Usharani
L'eBook என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..? est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte