- Ebooks
- Livres Audio
- Liseuses
நந்தினி அவசர அவசரமாகக் காலேஜுக்குக் கிளம்பினாள். அவள் ரூம் மேட் காஞ்சனா... "இருடி, நானும் வர்றேன், என்னை விட்டுட்டு நீ மட்டும் சீக்கிரம் போய் நல்ல பேர் எடுக்கவா? நீ அவ கூடத்தானே இருக்கே. ஏ... நீ மட்டும் லேட்டா வர்றேன்னு எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கணுமா நான். ஏன்டி நீயெல்லாம் ஒரு பிரண்டா? நட்புனா உயிரையே குடுக்கணும்டி. நீ என்னன்னா... தினமும் என்னைக் கேவலப்பட வைக்கிறே."
"உன்னாலே நான் தினமும் அடுத்தவங்க முன்னாடி அவமானப்பட்டு கேவலப்பட்டுத் தலை குனிஞ்சு நிக்கிறேன். இது உனக்கே அசிங்கமாத் தெரியலே. நம்ம பிரண்டுக்கு அவமானம்னா அது நமக்கும்தானு. அது எங்க உனக்குத் தெரியப் போகுது. இது மாதிரியெல்லாம் நடக்கட்டும்னுதானே, நல்ல பிள்ளை மாதிரி நீ மட்டும் கிளம்பிப் போறே. இப்ப நீ போனே நான் தற்கொலை பண்ணிக்குவேனு மட்டும் நீ நினைக்காதே. உன்னைப் பண்ணிக்கும்படி நான் வப்பேன். எப்படி வசதி... இன்னும் நினைக்கிறே... நீ சீக்கிரம் என்னை விட்டுக் கிளம்பணும்னு..." என்று போர்வைக்குள் படுத்துக் கொண்டே பேசினாள்.
"ஏன்டி நாயே... எதுக்குடி தினமும் இப்படிப் பண்றே. என்னை மேம் இன்று ப்ராஜெக்ட் விசயமா பேசணும் என்று வரச் சொன்னாங்க. இப்ப போனாத் தான் டிபார்ட்மெண்ட்ல தனியா பாக்கலாம். லேட்டா போனா கிளாசுக்குப் போயிடுவாங்க. அப்புறம் நான் கிளாசுக்குப் போனா அவங்களைத் தேடி நாலாவது மாடியில் இருந்து இறங்கி வந்து அவங்களைத் தேட முடியாது. எனக்கு நேரமுமில்லை. அதான் சீக்கிரம் போறேன்."
"நீ என்ன ப்ராஜெக்ட் பண்ணப் போறியோ, எனக்குத் தெரியாது. என்னை விட்டுட்டு மட்டும் போகாதே."
"ஏன்டி இப்படிப் போர்வைக்குள் படுத்துக்கிட்டு சவடால் பேசுறியே... பேசும் நேரத்துக்கு இந்நேரம் கிளம்பி இருக்கலாம். நீ எழுந்து, குளித்து சாப்பிட்டு எப்போ நீ மேக்கப்போட்டுக் கிளம்புறது. நீ மேக்கப் போடவே இரண்டு மணி நேரம் ஆகுமே. உன்னோட நான் வந்தா காலேஜ் ஆரம்பிச்சே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகுமே. அதுவும் இன்று கிளாஸ் மேம் என்னை வறுத்து எடுத்து விடுவாங்க. கடலை போல... அவங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லவே அசிங்கமா இருக்கும், பசங்க முன்னாடி. அன்றும் அப்படித்தான் உன் பேச்சைக் கேட்டு லேட்டா போனதுக்கு இராத்திரியெல்லாம் ஒழுங்கா தூங்கலையா... யாரை நினைச்சுக் கனவு கண்டேனு அத்தனை கேவலமா சிரிச்சுக்கிட்டே நக்கலா கேட்டாங்க. எனக்கு உயிரே போய்விடும்போல் இருந்தது. பசங்கல்லாம் சிரிக்கிறாங்க... உனக்கு இதுதான் வேணுமா?"
"நீ ஏன்டி அந்த எலிவால் முடிக்காரி பத்தி இத்தனை பயப்படுறே. அந்த வாலை நான் நறுக்கி விடுறேன். அவ புருசன் டைவர்ஸ் பண்ற மாதிரி. இல்லாத முடியை இப்படி... அப்படின்னு சிலுப்பி ஆட்டிக்கிட்டுத் திரியுறா. அவளே அப்படி ஆட்டும் போது உன் முடியை அவ மூஞ்சியில் படும் மாதிரி ஆட்டிக் காட்ட வேண்டியதுதானே."
"ஏன்டி இப்ப முடியைப் பத்திப் பேசுற நீ. இப்ப முடிதான் பிரச்சனையா...? அப்படின்னா சொல்லு இப்பவே நான் மொட்டை போட்டுக்குறேன்," என்றாள் கோபமாக.
"ஐயோ! அப்படி மட்டும் பண்ணிறாதேடி. இப்ப நடக்கப்போற ஃபேஷன் ஷோவுல உன்னை நம்பித் தான் பெட் கட்டியிருக்கேன் என் கிளாசில்."
"என்னை நம்பியா...? எதுக்கு?"
"இந்தக் காலத்துப் பெண்களுக்கு முடி இயற்கையிலேயே வளருதா... இல்லை குட்டையா இருக்கா... மொட்டையா இருக்கானு டாப்பிக். எனக்கும் என் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே சண்டை. உனக்குத்தான் முடியே இல்லையே. ஆம்பளை மாதிரி கிராப் வெட்டிக்கிட்டு திரியறியே. நீ எதுக்கு இதில் கலந்து கொண்டு எங்க நேரத்தை வீணாக்குறேனு திட்டினாளுக. எனக்கு வந்ததே கோபம். சும்மா விடுவேனா நான். எனக்குத்தான்டி முடியில்லை. என் பிரெண்ட்... என் உயிர்த் தோழிக்கு வந்து பாருங்க, எவ்வளவு முடி இருக்குன்னு என்று நானும் சவால் விட்டேன். அவளுக உனக்காக உன் பிரெண்ட் எப்படி வருவா... இது ரூல்ஸ் இல்லையே. நீ இது மாதிரி வந்து ஏடாகூடமா பிரச்சனை பண்ணாதே என்றனர்."
"நான் என்னடி பிரச்சனை பண்றேன். எனக்காக என் பிரண்ட் வருவா. பேரை எழுதிக்கோங்கன்னு பேர் குடுத்துட்டு வந்துட்டேன்."
"யார்... பேரை?"
"என்னடி சனியனே. இத்தனை நேரம் சொன்னதையெல்லாம் கதை கேட்கிற மாதிரி கேட்டுட்டு இப்ப யார் பேருங்குறே. உன் பேரைத்தான் குடுக்க முடியும். உன் பாட்டி பேரையா குடுக்க முடியும். வந்துட்டா... கேள்வி கேட்க... பெரிசா..."
"உன்னைக் கொல்லப் போறேன்டி நான் இப்ப... எதுக்குடி இப்படியெல்லாம் நீ பண்றே. என்னால இது மாதிரி ஃபேஷன் ஷோவுல எல்லாம் கலந்துக்க முடியாது."
Titre : ஆசை நாயகனே...
EAN : 9798224138364
Éditeur : S.Usharani
L'eBook ஆசை நாயகனே... est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte